09th December 2020 10:15:32 Hours
மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ செவ்வாய்க்கிழமை (8) பனாகொடையில் உள்ள மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 9 வது தளபதியாக இராணுவ மரபுகளுக்கும் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் இலங்கை இலேசாயுத காலாட்படையின் படைத் தளபதியாகவும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியினை சிரேஸ்ட அதிகாரிகள் வரவேற்றதுடன் நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணி நடைமைதானத்தில் இலங்கை இலேசாயுத காலாட் படையின் படையினரால் அதியுயர் அணிவகுப்பு கௌரவம் வழங்கப்பட்டது.
பின்னர், மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ தனது புதிய அலுவலகத்தில் மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் பதவியேற்றதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர் நிகழ்வின் நினைவாக மரக்கன்று ஒன்றினை நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பல சிரேஸ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்து , அதிகாரிகள் மற்றும் படையினருக்கான உரை என்பன இடம்பெற்றது. மேற்கு பாதுகாப்பு படை தலைமையக அதிகாரிகள், 14 மற்றும் 61 வது படைப்பிரிவுகளின் தளபதிகள் , பிரிகேட் தளபதிகள், நிலையத் தளபதி, நிறைவேற்றுத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாயுகள் நிகழ்வில் பங்கு கொண்டனர்.
மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ, இந்த புதிய நியமனத்திற்கு முன்பு 56 வது படைப்பிரிவின் தளபதியாக செயற்பட்டார். மேஜர் ஜெனரல் சூலா அபேநாயக்க அவர்களின் ஓய்விற்கு பிறகு மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரு இப்புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். buy shoes | NIKE