Header

Sri Lanka Army

Defender of the Nation

08th December 2020 13:29:11 Hours

கடந்த ஆண்டுகளின் பொறியியல் படையின் விளையாட்டு சாதனையாளர்கள் கௌரவிப்பு வர்ண விழா

கடந்த சில ஆண்டுகளில் படையணிக்கும் இராணுவத்திற்கு புகழையும் கௌரவத்தையும் கொண்டுவந்த இலங்கை பொறியியலாளர் படையணியின் விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கு இலங்கை பொறியியலாளர் படைத் தளபதியும் பதவி நிலை பிரதானியும் இராணுவ விளையாட்டு பேரவையின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் அங்கீகாரமும் பாராட்டும் வழங்கப்பட்டது. இவ் வர்ண இரவு 2020 வியாழக்கிழமை (4) பனாகொடை படைத் தலைமையகத்தில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வின் ஆரம்பமானது பொறியியலாளர் படை கீதம் இசைத்தலுடன் இலங்கை பொறியியலாளர்கள் படை மற்றும் அதன் சாதனையாளர்களைப் பற்றிய வீடியோவைத் திரையிடுவதோடு தொடங்கியது.

பிரதம விருந்தினர் மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன பாதுகாப்பு அமைச்சின் மேலதிக பணிப்பாளரும் முப்படை தலைமையக கட்டட தொகுதி கட்டுமான பணிகளின் திட்ட முகாமையாளர் மேஜர் ஜெனரல் குமா பீரிஸ், மற்றும் பிரதம கள பொறியியளார் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர, ஆகியோர் இராணுவம், பாதுகாப்பு சேவைகள் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு நிகழ்வுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வர்ண கௌரவங்களை வழங்கினர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதம விருந்தினரான மேஜர் ஜெனரல் குணவர்தன விளையாட்டுத் துறையில் பொறியியலாளர்களின் பங்களிப்பைப் பாராட்டினார். மேலும் விளையாட்டு இராணுவ வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருப்பதால், எதிர்காலத்திலும் அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

கரப்பந்து, பில்லியர்ட்ஸ், மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக்ஸ், ரோயிங், ஜூடோ, கயிறு இழுத்தல், கட்டழகு, கபடி, குத்துச்சண்டை, நீச்சல் போன்றவற்றில் சாதனை படைத்தவர்களும் அதே விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இலங்கை இராணுவத்தின் நடனக் குழுக்கள் மற்றும் இலங்கை பொறியியலாளர் படையினர் பார்வையாளர்களை கலை அம்சங்களால் மகிழ்வித்தனர். நிகழ்வில் சிறந்த சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்துக்கொண்டனர். பொறியியல் படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் மங்கள மாயாதுன்ன அவர்களின் நன்றியுரையினை அடுத்து தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.Best jordan Sneakers | Men’s shoes