Header

Sri Lanka Army

Defender of the Nation

08th December 2020 13:23:12 Hours

ஓய்வுபெறும் மேற்கு தளபதிக்கு படையினரின் பிரியாவிடை

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் சூலா அபேநாயக்க அவர்கள் சேவையில் ஓய்வு பெறுவதனால் பனாகொடை மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக வளாகத்தில் திங்களன்று (7) பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அளித்தது பிரியாவிடை வழங்கப்பட்டது.

கெமுனு ஹேவா படையினர் ஓய்வுபெறும் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதிக்கு அணிவகுப்பு சதுக்கத்தில் அணிவகுப்பு கௌரவத்தை வழங்கினர். நிகழ்வில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக அதிகாரிகள், 14 மற்றும் 61 வது படைப்பிரிவுகளின் தளபதிகள் , பிரிகேட் தளபதிகள், பணிப்பாளர்கள், நிலையத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக் கொண்டனர்.

பின்னர்படையினருக்கு உரையாற்றிய மேஜர் ஜெனரல் சூலா அபேநாயக்க தளபதியாக இருந்த காலத்தில் அவருக்கு வழங்கிய உதவி மற்றும் ஒத்துழைப்பிற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வின் இறுதியாக பனாகொடை உடற்பயிற்சி கூடத்தில் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரம் இடம்பெற்றது. bridge media | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today