07th December 2020 13:18:17 Hours
வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் நந்திகடல் இருகல் சந்தியில் உள்ள 652 வது பிரிகேட்டின் புதிய தளபதியாக ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை (4) பிரிகேடியர் உதய ஹெரத் பொறுப்பேற்றார்.
65வது படைப்பிரிவின் 652 வது பிரிகேட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியை பணி நிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதுடன் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படை படையினர்களால் பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் பிரிகேடியர் உதய ஹெராத் தனது பதவியேற்பிக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் உதய ஹெராத் 544 வது பிரிகேட்டின் தளபதியாக பணியாற்றினார்.
நிகழ்வில் அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்து, மரக்கன்று நாட்டுதல் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான உரை என்பன இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் கட்டளை அதிகாரிகள் மற்றும் பிரிகேட் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இப்போது 532 வது பிரிகேட் தளபதியாக பணியாற்றும் பிரிகேடியர் அனில் பெரேராவின் பின்னர் பிரிகேடியர் உதய ஹெரத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். latest Running Sneakers | Nike Running