09th December 2020 21:50:48 Hours
கெமுனு ஹேவா படையின் படைத் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான கெமுனு ஹேவா படையின் பெருமைமிக்க படையினரில் ஒருவருமான மேஜர் ஜெனரல் சூலா அபேநாயக்க இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை திங்களன்று (7) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்த போது மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகளைப் பாராட்டப்பட்டார்.
இச்சந்திப்பின் போது லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பழைய நினைவுகளையும் ஓய்வு பெற்றும் மேஜர் ஜெனரல் சூலா அபேநாயக்க இராணுவத்தில் வகித்த நியமனங்கள் , குறிப்பாக கெமுனு ஹேவா படையில் பணியாற்றியுள்ளமையை நினைவு கூர்ந்த்தோடு பல எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டார்.
வெளியேறும் சிரேஸ்ட அதிகாரி இராணுவத் தளபதியின் விருப்பங்களுக்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஊக்கத்தைப் பற்றியும் நினைவுப்படுத்தினார். சந்திப்பின் முடிவில் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெறுபவருக்கு பாராட்டு மற்றும் சிறப்பு நினைவு பரிசு வழங்கினார். Buy Kicks | Shop: Nike