Header

Sri Lanka Army

Defender of the Nation

07th December 2020 13:04:17 Hours

52வது படைப்பிரிவு சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு பொதிகள்

யாழ்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 52 வது படைபிரிவின் 521 வது பிரிகேட்டின் 11 விஜயபாகு காலாட் படை படையினர் 2020 டிசம்பர் மாதம் 03 ம் திகதி வல்வெட்டித்துறையில் சூறாவளி மற்றும் பாதகமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகளை விநியோகித்தனர்.

யாழ் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அந்த சமைத்த உணவு விநியோகிப்பதை 52வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிதசிரி லியானகே மேற்பார்வை செய்தார்.

521 வது பிரிகேட் தளபதி கர்ணல் மஹேன் சல்வதுர, 11 வது விஜயபாகு காலாட்படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் கீத் முனகமகே, அதிகாரிகள் மற்றும் படையினர் அவர்களின் அவசர தேவைகள் குறித்து விசாரித்தனர்.Nike Sneakers Store | nike air max 95 obsidian university blue book list