06th December 2020 14:19:20 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக்க மற்றும் 14 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 14 வது படைப் பிரிவின் 142 வது பிரிகேட் படைப் பிரிவின் படையினர் கொவிட்-19 சூழ்நிலையினால் பாதிப்புக்குள்ளான மோதரையில் வசிக்கும் தேவையுள்ள குடும்பங்களுக்கான 1000 உலர் உணவுப் பெதிகளை வெள்ளிக்கிழமை 4 ஆம் திகதி வழங்கினர். இதற்கான அனுசரணையானது வரையறுக்கப்பட்ட ‘மெல்வா’ தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் கேணல்(ஓய்வு) மஹிந்தரத்ன தென்னகோண் அவர்களினால் வழங்கப்பட்டது.
கொவிட்-19 தொற்று நோய் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் வாழ்வாதார சிரமங்களை எதிர் கொண்ட குறித்த குடும்பங்களின் நிலையை அறிந்த 142 வது பிரிகேட் படைப் பிரிவின் படையினர் இந்த திட்டத்தினை முன்னெடுத்தனர்.
142 வது பிரிகேட் படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் நிலந்த பெர்னாண்டோ அவர்கள் படையினர் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் இணைந்து பயணாளிகளின் வீடுகளுக்கு சென்று குறித்த உலர் உணவுப் பொதிகளை விணியோகித்தார்.best Running shoes | Air Jordan