06th December 2020 17:24:54 Hours
இலங்கை சிங்க படையின் படைத் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (05) அண்மையில் பதவி உயர்வு பெற்ற சிரேஸ்ட அதிகாரிகளான மேஜர் ஜெனரல் அஜித் பல்லவெல மற்றும் மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே ஆகிய இருவருக்கும் உயர்வுக்குப் பிறகு அங்கு வந்தபோது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
படைத் தளபதி சார்பாக படை நிலையத் தளபதி பிரிகேடியர் தம்மிக திஸாநாயக்க, சிங்க படையின் சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி ஷிரோமி பண்டார ஆகியோர் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை முறையே வரவேற்றனர். அணிவகுப்பு மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு அங்கு அவர்களுக்கு பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
இராணுவ மரபுகளுக்கு அமைய அன்றைய இரு கதாநாயகர்களுக்கும் நேர்த்தியாக உடையணிந்த படையினரால் இருவருக்கும் தனித்தனியாக அணிநடை மரியாதை வழங்கப்பட்டது. பினடனர் சந்தர்ப்பத்தை குறிக்கும் வகையில் வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டினர். பின்னர் மறைந்த படை வீரர்களின் நினைவுத் தூபியில் மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அனைத்து நிலைகளுக்குமான தேனீர் விருந்து இடம்பெற்றது. அங்கு இருவருக்கும் இனிப்புகளையும் சில எண்ணங்களையும் கூட்டத்துடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அன்றைய நிகழ்வு இறுதி அம்சமாக இலங்கை சிங்கப் படை படைத் தளபதியும் 12வது படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் அதிகாரிகளின் பங்கு பற்றலில் மதிய விருந்துபசாரம் வழங்கப்பட்டது. Adidas footwear | Gifts for Runners