06th December 2020 10:00:20 Hours
இன்று (06) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 669 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 204 பேர் கொழும்பு மாவட்டம், 170 பேர் கண்டி மாவட்டம், 111 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய மையம் தெரிவிக்கின்றது.
இன்று (06) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23,670 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 16,682 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 , கொழும்பு மீன் சந்தை கொத்தணி 20,611.
அதன் பிரகாரம் (05) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,227 ஆகும். அவர்களில் 20,089 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று (05) ஆம் திகதி வரை 7,001 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (06) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 652 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று காலை (06) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 07 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் பண்டாரகம, கொழும்பு சிறைச்சாலை, வெலிகடை சிறைச்சாலை, தெமடகொடை, கொழும்பு 13 மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதனடிப்படையில் இன்று (05) ஆம் திகதி காலை வரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 137ஆகும்.
இன்று (06) காலை கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 41 பயணிகளும் இந்தியாவில் இருந்து 6E 9034 விமான ஊடாக 23 பயணிகளும் அவுஸ்திரேலியாவில் இருந்து UL 607 விமான ஊடாக 36 பயணிகளும், ஜபானில் இருந்து UL 455 விமான ஊடாக 51 பயணிகளும், டுபாயில் இருந்து UL 226 விமான ஊடாக 33 பயணிகளும், இலங்கை வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை (06) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 61 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,730 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று டிசம்பர் (05) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 13,741 ஆகும். jordan Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ