Header

Sri Lanka Army

Defender of the Nation

06th December 2020 11:19:20 Hours

‘புரேவி’ சூறாவளிக்கு முன்னர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புரப்படுத்திய முல்லைத்தீவு படையினர்

கடந்த டிசம்பர் 2-3 ஆம் திகதிகளில் ஏற்பட்ட ‘புரேவி’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட அலம்பில் தெற்கு பகுதிற்கு தேவையான அவசர ஒத்துழைப்பானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் சிவில் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.குறித்த ஒத்துழைப்பானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் மற்றும் அதன் கட்டளையின் கீழ் உள்ள படைப் பிரிவின் படைத் தளபதிகளின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது.

அதனடிப்படையில், 59 வது படைப் பிரிவின் கீழ் சேவையாற்றும் 24 வது இலங்கை சிங்க படையணியின் படையினர், அலம்பில் தெற்கு பகுதியிலுள்ள வீதியில் வீழந்து கிடந்த மரங்களை துப்புரவு செய்தனர்.மேலும் முல்லைத்தீவில் இருந்து கோகிலாய் வரையிலான வீதியில் வீழ்ந்து கிடந்த மரங்களையும் அவர்கள் துப்புரவு செய்தனர்.

அதேவேளை, 64 வது படைப் பிரிவு மற்றும் 642 வது பிரிகேட் படைப் பிரிவின் 17 வது (தொண்) படையணியின் படையினரால் நெடுங்கேணியிலிருந்து முள்ளியவளை வரையான வீதியிலுள்ள வீழ்ந்து கிடந்த மரங்கள் அகற்றப்பட்டன.

அதேபோல், 68 வது படைப் பிரிவின் 6 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் முல்லைத்தீவிலிருந்து புதுக்குடியிருப்பு வரையான வீதியிலுள்ள வீழ்ந்து கிடந்த மரங்கள் அகற்றப்பட்டன.

அதேவேளை, சூறாவளியினால் பாதிக்கப்பட்ட உப்புமாவெளியிலுள்ள ஒரு குடுமபத்தினரது வீட்டுக் கூரையினை திருத்தியமைக்க 591 வது பிரிகேட் படையினர் தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர்.படையினர் அவர்களை முதலில் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று அவ்வீட்டினை திருத்தியமைத்ததோடு, அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கினர்.

சூறாவளி வானிலையின் ஆரம்ப கட்டத்தில், 593 வது பிரிகேட் படையினர் 19 வது கெமுனு ஹேவா படையினர் மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு, 489 பேர் உள்ளடங்கிய 123 குடும்பங்களை பாதுகாப்பாக கோகிலாய் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு நகர்த்தினர்.

அதேவேளை, குறித்த பிரதேசத்திலுள்ள அனைத்து பட்டாலியன்களும் ஏதாவது அவசர தேவை ஏற்படுமிடத்து ஒத்துழைப்பு வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டன.

சில நாட்களுக்கு முன்னர் வன்னி பிரதேசத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் புரேவி சூறாவளி தொடர்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ததோடு, அது தொடர்பான அவசியமான அறிவுறுத்தல்களையும் வழங்கினார். latest Nike release | adidas NMD Human Race