06th December 2020 09:16:08 Hours
கடந்த டிசம்பர் 2-3 ஆம் திகதிகளில் ஏற்பட்ட கனத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மொரவாவையுலுள்ள கல்லம்பத்து குள அணைக்கட்டானது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இணைக்கப்ட்டுள்ள 6 வது இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படையினரால் மிகவிரைவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களின் வழிகாட்டலின் கீழ், படையினர் பிரதேச செயலக மற்றும் நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களுடன் இணைந்து குறித்த பாதிப்புக்குள்ளான குளத்தின் அணைக்கட்டினை திருத்தியமைத்தனர்.
சில நாட்களுக்கு முன்னர் வன்னி பிரதேசத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் புரேவி சூறாவளி தொடர்பான முன்னெச்சரக்கை ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ததோடு, அது தொடர்பான அவசியமான அறிவுறுத்தல்களையும் வழங்கினார். Nike air jordan Sneakers | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf