Header

Sri Lanka Army

Defender of the Nation

01st December 2020 23:40:46 Hours

யாழ்பாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படையினரால் உலர் உணவு பொதிகள் வழங்கல்

52 வது படைப் பிரிவு தலைமையகத்தின் கீழ் உள்ள 523 வது பிரிகேட் படைப் பிரிவின் 4 ஆவது விஜயபாகு காலாட்படை படையணியின் படையினரால் கடந்த 28 ஆம் திகதி சனிக்கிழமை யாழ் கோவிலக்கந்தி கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட மகலங்கேர்னி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்ட்ட வருமைகோட்டின் கீழ் வாழும் 23 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

சீரற்ற மழை மற்றும் தற்போது நாடுபூராவும் பரவி வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிமித்தம், படையினரால் அரிசி, நெத்திலி, பருப்பு, வெங்காயம், பால் மா, மசாலா, உருளைக்கிழங்கு உள்ளடங்கிய உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள 4 ஆவது விஜயபாகு முகாமுக்குச் விஜயத்தை மேற்கொண்ட 52 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்தி லியனகே அவர்களின் மேற் பார்வையின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் 523 வது பிரிகேட் படைப் பிரிவுத் தளபதி கேனல் ரொஹான் ராஜபக்ஷ, 4வது விஜயபாகு காலாட்படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ் காலகே மற்றும் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் பலர் கலந்துகொண்டனர்.Running Sneakers Store | Men Nike Footwear