05th December 2020 11:23:53 Hours
இன்று (05) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 521 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டில் இருந்து இலங்கையை வருகை தந்த உள்நாட்டவர்கள் மூவரும் வெளிநாட்டவர் ஒருவரும், ஏனைய 517 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 342 பேர் கொழும்பு மாவட்டம், 91 பேர் கண்டி மாவட்டம் மற்றும் 44 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது
இன்று (05) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23,001 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 16,030 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். ( மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059, கொழும்பு மீன் சந்தை கொத்தணி 19,942)
அதன் பிரகாரம் (04) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 26,558 ஆகும். அவர்களில் 19,437 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று (04) ஆம் திகதி வரை 6,991 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (05) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 406 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்தோடு நேற்று பிலியந்தலையில் இடம்பெற்ற மரணத்தோடு கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 130 ஆகும்.
இன்று (05) காலை அபுதாபியில் இருந்து EY 264 விமானம் ஊடாக 82 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 48 பயணிகளும் இந்தியாவில் இருந்து UL 1206 விமான ஊடாக 45 பயணிகளும், கட்டாரில் இருந்து UL 218 விமான ஊடாக 288 பயணிகளும், சீனாவில் இருந்து UL 867 விமான ஊடாக 02 பயணிகளும், இலங்கை வருகை தந்துள்ளனர். மேலும் இன்று (05) மாலைத்தீவில் இருந்து UL 102 விமானம் ஊடாக 33 பயணிகளும், ஜேர்மனியில் இருந்து UL 554 விமானம் ஊடாக ஒருவரும் வரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை (05) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 63 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,313 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று டிசம்பர் (04) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 13,664 ஆகும். spy offers | Nike