Header

Sri Lanka Army

Defender of the Nation

01st December 2020 20:02:00 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் (30) ஆம் திகதி திங்கட்கிழமை 51 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கீழ் இயங்கும் 513 ஆவது பிரிகேட் தலைமையகத்திற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

படைப் பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த யாழ் பாதுகாப்பு படைத் தளபதியை 513 ஆவது பிரிகேட் படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் முகம்மது பாரிஸ் அவர்கள் வரவேற்றதோடு, படைப் பிரிவு பிரதேசத்தில் உள்ள தங்களது கடப்பாடுகள் தொடர்பான விரிவான விளக்கத்தினையும் தளபதிக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி 51 ஆவது படைப் பிரிவு படைத் தளபதியுடன் இணைந்து 11 ஆவது இலங்கை காலாட் படையணி மற்றும் 16 ஆவது கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றை பார்வையிட்டார்.

மேலும், குறித்த விஜயத்தில் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பதவி நிலை மற்றும் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி அதிகாரிகள் இணைந்து கொண்டனர். Sportswear free shipping | Nike sneakers