Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2020 12:57:09 Hours

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-நொப்கோ தெரிவிப்பு

இன்று (03) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 878 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 402 பேர் கொழும்பு மாவட்டம், 188 பேர் கம்பஹா மாவட்டம் மற்றும் 106 பேர் களுத்துறை (அட்டுலுகம 98) மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (03) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலயகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21,857 பேர் ஆகும். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 3,059 பேரும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் 18,798 பேரும் உள்ளடங்குவர், அவர்களில் மொத்தம் 14,896 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் நேற்று 02 ஆம் திகதி வரை மரணமடைந்தவர்கள் உட்பட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,409 ஆகும். அவர்களில் 18,303 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று 02 ஆம் திகதி வரை 6,982 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (03) (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 487 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று வரை, கொவிட்-19 தொற்று காரணமாக 02 மரணங்கள் பதிவாகியுள்ளது. அவர்கள் கொழும்பு 13 மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதனடிப்படையில் இன்று வரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 124 ஆகும்.

இன்று (03) காலை கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 49 பயணிகளும் ஜோர்தான் நாட்டில் இருந்து UL 554 விமான ஊடாக 284 பயணிகளும் சீனாவில் இருந்து UL 881 விமான ஊடாக 02 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அதேவேளை ஓமான் நாட்டில் இருந்து YW 371 விமானம் ஊடாக 54 பயணிகளும், இந்தியாவில் இருந்து AI 281 விமான ஊடாக சில பயணிகளும் வரவுள்ளனர்.வருகை தந்த அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

இன்று காலை (03) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 59 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,400 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 02 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 13,423 ஆகும். Nike sneakers | Womens Shoes Footwear & Shoes Online