Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2020 20:04:36 Hours

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் வரை மட்டுப்படுத்தல் - பணிக்குழு தெரிவிப்பு

கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, மருத்துவ நிபுணர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசல குணவர்தன, ஆகியோரின் இணைத் தலைமையில் 01 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு பணிக்குழு கலந்துரையாடலானது அனைத்து உறுப்பினர்கள் மற்றும் துறைசார்ந்த வல்லுநர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

நாட்டில் கொவிட் 19 நோய்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நிலை, புதிய முன்னேற்றங்கள் மற்றும் அவசர நடவடிக்கைகள் தொடர்பாக பணிக்குழுவினர் கலந்துரையாடினர் . தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் இருப்பிடங்களை நிர்வகித்தல், புதிய பகுதிகளுக்கு வைரஸ் ஊடுருவல், பொதுமக்களின் நடத்தை முறைகள், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை நடத்துதல் ஆகியவை தொடர்பான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. பொது மக்கள் சிரமப்டுவதனை தவிர்க்கும் முகமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தல்களின்படி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் அளவை பொலிஸ் பகுதிகளிலிருந்து கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளாக குறைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நொப்கோ தலைவர் தெரிவித்தார்.

பாடசாலைகள் மீண்டும் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவர்களின் வருகை 40% -75% வரை காணப்பட்டது என்று லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார். ஊவா மாகாணம் மட்டுமே 75% பாடசாலை வருகையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள சில பகுதிகளில், உள்ளூர் அதிகாரிகளால் கொவிட்-19 நிலைமை தொடர்பாக சரியான மதிப்பீடு செய்யாமல் எடுக்கப்பட்ட முடிவுகளினால் திறக்கப்படக்கூடிய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவது குறித்து எழுந்த கேள்வி தொடர்பாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் மட்டுமே இன்னும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, கம்பஹாவிலிருந்து 3 பகுதிகள் மற்றும் கொழும்பிலிருந்து 2 பகுதிகள் உள்ளன. இதேபோல், அடலுகம, அகுரனை மற்றும் அக்கரைப்பத்து ஆகிய பகுதிகளும் அதிக கொவிட் தொற்றார்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் குறித்த பரதேசங்கள் தனிமைபடுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பணிக்குழுவிடம் தெரிவித்ததாவது, இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்களை வெளிப்படுத்த விசாரணை நடந்து வருகிறது. மஹர சிறைச்சாலையின் கைதிகளின் கொவிட்-19 நோய்தொற்றினை கண்டரிந்து வைத்திய ரீதியாக சிகிச்சையளிப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் பின்பற்றியிருந்தால், இந்த சம்பவம் வேறு வழியில் நிர்வகிக்கப்பட்டு தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"அவற்றில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் காரணமாக ஏராளமான கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். போதைக்கு அடிமையானவர்களை நீண்டகாலமாக சிறையில் அடைக்காமல் புனர்வாழ்வளிக்கும் திட்டத்தை வகுக்குமாறு இராணுவத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த கைதிகளுக்கு இராணுவம் இப்போது மேலதிக புனர்வாழ்வு மையங்களை நிறுவ முயற்சிக்கிறது, ”என்று அவர் மேலும் கூறினார்.

ஏன்டிஜென் சோதனைகளுக்கான எதுவிமான விலைச் சூத்திரத்தினை அதிகாரிகள் இதுவரை வழங்கவில்லை என்றும் அவர் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், தேவைப்பட்டால், தேவையான கொவிட் நோய் தொற்று இறப்புகளுக்கு சவப்பெட்டிகளை இலவசமாக ஏற்பாடு செய்யுமாறு அனர்த்த முகாமைத்துவ மையத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றினால் இறந்த உடல்கள் சவ அறையில் உரிமை கோரப்படாமல் இருப்பதனால் தகனம் செய்வதில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசல குணவர்தன தெரிவித்தார். ஒரு முடிவு எடுக்கப்பட்டவுடன், அந்த உடல்கள் அரச செலவில் அகற்றப்பட வேண்டும். "எங்கள் தகனம் மற்றும் அடக்கம் முறை மிகவும் தெளிவாக உள்ளது. அந்த அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. குறித்த இறந்த உடல்களை சுகாதார அமைச்சு தொடர்ந்து தகனம் செய்யும் "என்று டொக்டர் குணவர்தன வலியுறுத்தினார். (ஆதாரம்: தகவல் நொப்கோ) Mysneakers | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today