Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd December 2020 21:43:07 Hours

'புரேவி' சூறாவளிக்கான தயார் நிலை குறித்து இராணுவத் தளபதி வன்னி படையினரிடம் உரையாற்றல்

இன்று (2) மாலை கிழக்கு கடற்கரை வழியாக வீசும் 'புரேவி' சூறாவளி வன்னி பிராந்தியத்தினை கடந்து சென்று பாதகமான சூழ்நிலையினை புல்மோட்டை, கோகிலாய், வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் ஏற்படுத்தக்கூடும் என்பதனால், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இன்று (2) அதிகாலை வவுனியாவில் உள்ள வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு, படையினரை அவசரநிலைக்கு தயாராக இருக்குமாறு குறிப்ட்டார் .

"வன்னியில் நான் நேரடியாக பிரசன்னமாகி , உடனடி அவசரகால ஏற்பாடுகளை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகள், அரசு நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு மற்றும் பிற அனைத்தையும் பாதுகாப்பது என்பது பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தளபதி என்ற வகையில் அது எனது கடமையாகும். இந்த பிராந்தியத்தில் நமது மக்களின் பாதுகாப்பிற்கான அத்தியாவசிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் நாட்டின் இருப்பு மற்றும் மக்கள் இயற்கை பேரழிவுகளில் அல்லது வேறுவிதமாக அச்சுறுத்தப்படும் போதெல்லாம் இந்த நாட்டின் ஆயுதப் படைகள் முன்னின்று செயற்படுகிறாரகள். எங்களது பல திறமையான ஆயுதப்படைகள் எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்கும் திறன் கொண்டவை, எல்லா நேரத்திலும் நாங்கள் எல்லா சவால்களையும் திறம்பட எதிர்கொண்டுள்ளோம் "என்று லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (2) காலை வன்னி பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உரையாற்றுகையில் கருத்து தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ மையம், மாவட்ட செயலகம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுடனான நெருக்கமான ஒருங்கிணைப்பில், வன்னியில் உள்ள பொது மக்களின் நலனுக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் இப்போது மேற்கொண்டுள்ளோம், எந்தவொரு அவசரநிலைக்கும் தேவையான அனைத்து இயந்திரங்கள், உபகரணங்கள், கனரக வாகனங்கள் மற்றும் ஏனைய தேவையான கருவிகள் போன்றவற்றை நாங்கள் தயாராக வைத்துள்ளோம் என அவர் மேலும் கூறினார். "மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

அங்கு வருகை தந்த அவரை கெமுனு ஹேவா படையினர் அவருக்கு நுழைவாயிற் மரியாதை செலுத்தினர். பின்னர் வன்னிப் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் இராணுவத் தளபதியை வரவேற்றார். பின்னர் உயிர் நீத்த படை வீர்ர்களின் நினைவாக உயிர் நீத்த படைவீர்ர்களின் நினைவுத் தூபிக்கு பிரதம அதிதியவர்கள் மலர் மாலை அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் முகாம் வளாகத்தில் ஒரு 'சந்தனம்' மரக்கன்றுகளை நட்டதுடன் குழு புகைப்படத்தில் கலந்து கொண்டார் வன்னி பாதுகப்பு படைத் தளபதி, வன்னி முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி, படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள் , பிரிகேட் படைப்பிரிவு தளபதிகள், தளபதிகள் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோருடனான உரையாடலின் போது, வருகை தந்த இராணுவத் தளபதி அந்தந்த பகுதிகளிலுள்ள தகவல்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.பின்னர் அவர் வன்னி பாதுகப்பு படைத் தளபதி, வன்னி முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி, வன்னி பாதுகப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள அனைத்து படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள் ஆகியோருடன் குழு புகைப்படத்தில் இணைந்து கொண்டார்.

வன்னி படையினர் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வன்னி பகுதி முழுவதிலும் ஒரு போர் கடினப்படுத்தப்பட்ட சிப்பாய் என்ற தனது நெருக்கத்தை நினைவு கூர்ந்தார், மேலும் வன்னி பகுதியின் மத, கலாச்சார, இன மற்றும் பொருளாதார மட்டங்களில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் நிலவும் பகுதிகளாகவும் அதன் பிரத்தியேக முக்கியத்துவத்தை மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாக சுட்டிக்காட்டினார். அனைத்து இன மக்களிடையேயும் இந்த சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு ஆதரவளித்த படையினரை அவர் பாராட்டினார். "வன்னியில் தேவைப்படுபவர்களுக்காக மொத்தம் 654 புதிய வீடுகளை நிர்மாணிப்பதில் உங்கள் வன்னி தலைமையகம் முன்னிலை வகித்துள்ளது, இன்னும் அந்த தனித்துவமான மனிதாபிமான நடவடிக்கைகள் தொர்ந்த வண்ணமுள்ளன. இப்பகுதிக்கு சிறந்த பாதுகாப்பைக் கொடுக்கும் அதே வேளையில், ஜனாதிபதியின் கொள்கையான ‘சுபீட்சத்தின் நோக்கு' இன் பிரகாரம் , சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பிற அனைத்து சமூக விரோத செயல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அழிவுகளை தடுப்பதற்கான சட்ட அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் நீங்கள் இப்போது ஒரு முன்னோடி சக்தியாக பணிபுரிகிறீர்கள். இந்த நாட்டில் எங்கள் திறன்களில் மிக உயர்ந்த நம்பிக்கையை வைத்து கட்டட பணிகள் எங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன, மேலும் அந்த இலக்குகளை தொழில் வல்லுநர்களாக உணர்ந்து கொள்வதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும், ”என்று அவர் வலியுறுத்தினார்.

இராணுவத் தளபதி அவர்கள் தெரிவிக்கையில் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக சமீபத்தில் நிறுவப்பட்ட புதிய பொறியியல் பிரிவு தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு பொறுப்பாகும். புதிய ட்ரோன் படையணி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துகின்றது மற்றும் வேளாண்மை மற்றும் கால்நடை படையணியின் கீழ் முன்மொழியப்பட்ட ஐந்து பட்டாலியன்களின் மூலம் எந்தவொரு தேசிய அச்சுறுத்தல் அல்லது அவசரகாலத்திலும் பொதுமக்களுக்கு உதவுகின்ற இந்த அமைப்பு தேசத்தின் பாதுகாவலராக புதிய நிலைக்கு கொண்டு செல்லப்படும்.

அனைத்து படையினர், ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக நலன்புரி வாய்ப்புகள் மேம்படுத்தப்படுவதை முன்னிட்டு அவர் முப்டையினருக்காக கண்டியில் ஒரு தனி புதிய இராணுவ வைத்தியசாலையை நிர்மாணிப்பதன மூலம் விரைவில் அவர்களுக்கு, ஓய்வு பெற்றவர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு வசதியாக இருக்கும்.மேலும் கொழும்பு இராணுவ வைத்தியசாலை வளாகத்திற்குள் தற்பொழுது நிறைவடையும் தருவாயில் உள்ள 15-மாடி புதிய வைத்தியசாலை பிரிவு மூலம் எதிர்காலத்தில் முப்படையினரின் அனைத்து உயர் மட்ட மருத்துவ தேவைகயும் பூர்த்தி செய்யக்கூடியதாய் இருக்கும். "இதேபோல், சமூக செயல்பாடுகள், திருமணங்கள் , உணவக அறையில் உள்நுழைதல் போன்றவற்றில் இராணுவ மதிப்பை மேலும் ஊக்குவிக்கும்ஒரு புதிய சீருடைகளை அறிமுகப்படுத்த திட்டங்கள் உள்ளன," என்று அவர் மேலும் தெரிவித்தார். இராணுவ சேவா வணிதா பிரிவு மற்றும் ஏனைய பரிவுகளினால ஏனைய நலனபுரி திட்டங்களும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

வட மத்திய முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால், 21 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, 54 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திராஜித் பண்டார, 56 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ, 62 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, பிரிகேட் படைப்பிரிவு தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Running Sneakers | NIKE AIR HUARACHE