01st December 2020 18:38:22 Hours
இலங்கை பொறியாளர்களின் வரலாற்றில் மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர இலங்கை இராணுவத்தின் முதல் பொறியியலாளர் படைப்பிரிவின் முதல் தளபதியாக புதன்கிழமை (25) மத்தேகொடையில் பதவியேற்றார்.
தேசிய அளவிலான பணிகளை மேற்கொள்ளக்கூடிய உணர்தலின் பின்னணியில் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் பொறியியலாளர் படைப்பிரிவின் முதல் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர நியமிக்கப்பட்டார். புதிய தளபதி தனது புதிய அலுவலகத்தில் மகா சங்க உறுப்பினர்களின் ஆசீர்வதித்திற்கு மத்தியில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு புதிய கடமைகளை ஏற்றுக்கொண்டார்.அங்கு அவருக்கு பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
படையினருக்கு உரையாற்றும் போது நாட்டின் சிறந்த நலன்களுக்காக ஒரு வல்லமை மிக்க பிரிவாக தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளின் முக்கியத்துவத்தை விவரித்தார். இந்நிகழ்ச்சியில் சிரேஸ்ட அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர இந்த புதிய நியமனத்திற்கு முன்பு இராணுவத் தலைமையகத்தில் பணியாளர் கடமை கிளையின் பணிப்பாளராக பணியாற்றினார். Authentic Nike Sneakers | Air Jordan