Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd December 2020 00:02:00 Hours

ஒட்டுச்சுட்டான் வறிய கும்பத்திற்கு படையினரால் வீடு புனரமைப்பு

மற்றுமொரு சிவில்-இராணுவ ஒத்துழைப்புத் திட்டமாக முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகம் ஒட்டுச்சுட்டான் வறிய குடும்பத்தின் உடைந்த வீட்டை முற்றிலுமாக புனரமைத்து, திங்களன்று (30) பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் வேண்டுகோளின் பேரில், தென் பகுதி நன்கொடையாளர்களான திருமதி இமாலி தபரே, திருமதி அகிலா நவரத்ன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிபீபீ மெட்டல் கன்ஸ்ட்ரக்ஷன் நிர்வாக இயக்குனர் திரு கபில விதான ஆகியோரின் பொருளுதவியின் ஊடாக திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஒடுசுட்டான் சின்னசலம்பன் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட வீடு மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களால் எளிய விழாவின் ஊடாக சம்பிரதாய பூர்வமாக வழங்கப்பட்டது.

64 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் பல்லவல அவர்களின் வழிக்காட்டலில் 643 வது பிரிகேட்டின் தளபதி டிரான் டி சில்வா மற்றும் 64 வது படைப்பிரிவின் கேணல் பொது பணி கேணல் பிரியங்கிக குலத்திலக நன்கொடையாளர்கள் சார்பாக பொருட்கள் மற்றும் நிதி செலவுகளை ஒருங்கிணைத்தனர்.

642 வது பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் பிரசன்ன விஜேசூரியாவின் மேற்பார்வையில் 23 வது விஜயபாகு காலாட் படை படையினர் 64வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஜி.ஏ.எம் விக்ரமசிங்கவின் ஒருங்கிணைப்புடன் கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

64 வது படைப்பிரிவு மற்றும் 641 வது பிரிகேட் பணியாளர்கள், மற்றும் 14 வது இலங்கை சிங்க படையின் படையினர் ஒரே நாளில் சில அத்தியாவசிய பொருட்களை குறித்த குடும்பத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.

641 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனக ஜயவர்தன , அரசு அதிகாரிகள், ஒடுசுட்டான் பொலிஸ் நிலைய அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள் , அதிகாரிகள் மற்றும் படையினர் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப சமூக இடைவெளியுடன் நிகழ்வில் கலந்துக்கொண்டனர். Adidas footwear | Sneakers