02nd December 2020 11:21:56 Hours
அனுபவம் வாய்ந்த காலாட்படை அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ இலங்கை இலேசாயுத காலாட் படையின் 13 வது படைத் தளபதியாக திங்கள்கிழமை (30) ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்கள் மத்தியில் பனாகொடையில் கடமை ஏற்றுக்கொண்டார்.
இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக மேஜர் ஜெனரல் வசந்த அப்ரு நுழைவாயிலுக்கு வந்த போது பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்குவதற்கு முன்னதாக பிரதி நிலையத் தளபதி கர்னல் ரவீந்திர ஜயசிங்க அவர்களால் வரவேற்கப்பட்டார். பின்னர் நிலையத் தளபதி பிரிகேடியர் அனுர திசாநாயக்க உள்வரும் சிரேஸ்ட அதிகாரியை வரவேற்றார். பின்னர் அணிவகுப்பு மைதானத்தில் படையினரால் மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சி நிரலில் அடுத்து மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ தாய்நாட்டின் நலனுக்காக உயிர் நீத்த ஆயிரக்கணக்கான படையினருக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ தனது புதிய அலுவலகத்தில் தனது பதவியேற்பிக்கான ஆவணத்தில் மகா சங்க உறுப்பினர்கள் சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் சேத் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் கையொப்பமிட்டார்.
இறுதியாக அனைத்து நிலைகளுக்குமான தேனீர் விருந்து , அதிகாரிகள் மற்றும் படையினருக்கான உரை என்பவற்றுடன் நிறைவு பெற்றது. Running sport media | Nike for Men