Header

Sri Lanka Army

Defender of the Nation

01st December 2020 12:05:22 Hours

கடந்த 24 மணிக்குள் மேலும் 02 மரணங்கள்

இன்று (01) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 503 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் உள்நாட்டவர்கள் 496 பேர் ஆகும். வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து மூவரும் கட்டாரிலிருந்து ஒருவரும் உகண்டாவிலிருந்து ஒருவரும் மற்றும் ஒரு கடல் பாதுகாப்பு அதிகாரியும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 147 பேர் கொழும்பு மாவட்டம், 130 பேர் கம்பஹா மாவட்டம் மற்றும் 41 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று (01) காலை 0600 மணிவரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,438 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 14,152 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 3,059 பேரும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் 17,379 பேரும் சுகமடைந்து வைத்தியசாலைகளில் வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் 30 ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 23,986 ஆகும். அவர்களில் 17,559 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று 30 ஆம் திகதி வரை 6,309 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (01) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 558 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று காலை (01) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 02 மரணங்கள் பதிவாகியுள்ளது. அவர்கள் கலஹா மற்றும் அலுத்கம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று (01) காலை அபுதாபியில் இருந்து EY 264 விமானம் ஊடாக 49 பயணிகளும் ஜேர்மனியில் இருந்து UL 455 விமான ஊடாக 05 பயணிகளும், கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 36 பயணிகளும், தோகாவில் இருந்து UL 218 விமான ஊடாக 59 பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை (01) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 58 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,204 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 30 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 12,031 ஆகும். Buy Sneakers | Sneakers