Header

Sri Lanka Army

Defender of the Nation

01st December 2020 08:00:22 Hours

புதிய பொது பொறியியலாளர் பிரிகேட்டிற்கு முதலாவது தளபதி பதவியேற்பு

பொது தேசத்தைக் கட்டமைக்கும் பணிகள், கட்டுமானங்கள், புனரமைப்புத் திட்டங்கள், பாடசாலை மேம்பாட்டுத் திட்டங்கள், நில கட்டுமானங்கள் மற்றும் பிற பன்முக கள பொறியியல் பணிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்து செயல்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் சிந்தனை மற்றும் வழிகாட்டுதலிற்கு அமைவாக உருவாக்கப்பட்ட புதிய படைப்பிரிவின் முதலாவது தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர நியமிக்கப்பட்டார்.

பொது பொறியியல் பிரிகேட்டின் முதலாவது தளபதி பிரிகேடியர் துமிது ஜயசிங்க சில நாட்களுக்கு முன்பு மெட்டகொடயிலுள்ள 5வது இலங்கை கள பொறியாளர்கள் முகாமில் பதவியேற்றார். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு உதவும் பொருட்டு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற திறப்பு விழாவில் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புதிய பிரிகேட் தளபதி தனது பதவியேற்பு ஆவணத்தில் கையொப்பமிட்டார். நிகழ்வில் முதலாவது இராணுவ கள பொறியியலாளர் படை கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஆர். டி. கனேகொட, 05 வது இராணுவ கள பொறியியலாளர் படை கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் டி.ஜி.திலகரத்ன, 12 வது இராணுவ கள பொறியியலாளர் படை கட்டளை அதிகாரி மேஜர் ஜி.ஜே.பி டி சில்வா 15 வது (தொ) இராணுவ கள பொறியியலாளர் படை கட்டளை அதிகாரி மேஜர் இ.எல்.கே.ஆர் எதிரிசிங்க உட்பட சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். படைப்பிரிவின் எதிர்கால பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அனைத்து கட்டளை அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் நடைப்பெற்றது. Running sports | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov