Header

Sri Lanka Army

Defender of the Nation

01st December 2020 10:00:22 Hours

பயிற்சி பணிப்பாளர் நாயகம் இராணுவ பொறியியலாளர் பயிற்சி பாடசாலைக்கு விஜயம்

பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹெரத் சனிக்கிழமை (28), எம்பிலிப்பிட்டியில் உள்ள இலங்கை இராணுவ பொறியாளர்கள் பயிற்சி பாடசாலைக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் தற்போதைய பயிற்சி பாடத்திட்டம், திட்ட வழிமுறைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர் குறிப்புகள் என்பவற்றை மதிப்பீடு செய்தார்.

பயிற்சி பாடசாலையின் தளபதி கர்னல் சந்தன விக்ரமநாயக்க அவர்களால் வரவேற்கப்படுவதற்கு முன்பதாக பணிப்பாளர் நாயகத்திற்கு பாகாவலர் அறிக்கையிடல் மரியாதை (வாகன பேரணிக்கு) வழங்கப்பட்டது. . கடந்த காலங்களில் அதிகாரி பயிற்றுவிப்பாளராகவும், தலைமை பயிற்றுவிப்பாளர் அதிகாரியாகவும் கடமையாற்றிய அவரது வருகை அங்குள்ள அனைத்து நிலைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தது ஏனெனில் அவர் தற்போதுய இராணுவ பயிற்சி கொள்கைகள் மற்றும் பயிற்சி நோக்கங்களின் அடிப்படையில் பயிற்சி எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை அதிகாரிகளுக்கு விளக்கினார்.

அவர் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றிய அவர் ஒரு நல்ல பயிற்றுவிப்பாளராக இருப்பதன் மதிப்பு மற்றும் ஒரு பயிற்றுவிப்பாளரின் குணாம்சங்கள் என்பவற்றை விளக்கினார். பயிற்சி பாடசாலையின் தளபதி அவருக்கு ஒரு நினைவு பரிசு வழங்கி அவரது அறிவுரைகளுக்கு நன்றி தெரிவித்தார். jordan release date | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf