30th November 2020 14:14:26 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மற்றும் வடமத்திய முன்னரங்க பாதுகாப்பு பகுதியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் அவர்கள் கிரித்தலேயில் அமைந்துள்ள இராணுவ பொலிஸ் பாடசாலையில் புதிதாக கட்டப்பட்ட கேட்போர் கூடத்தையும் திறந்து வைக்கும் நிகழ்விற்கு இணையாக (28) ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த அவரை இராணுவ பொலிஸ் பாடசாலையின் தளபதி கேணல் அனுர பண்டார அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இராணுவ பொலிஸ் பாடசாலையின் பயிற்சி, நிர்வாக அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
பின்னர் படையினருக்கு உறையாற்றிய அவர் தொழில் வாழ்க்கையின் பல்வேறு தொழில்முறை அம்சங்களில் பயிற்சியின் முக்கியத்துவத்தையும், உயர்ந்த ஒழுக்கத்தை பராமரிப்பதையும் வலியுறுத்தினார். மேலும், படைத் தளபதி அவர்கள் இராணுவ பொலிஸ் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட வரும் கட்டுமான மற்றும் திருத்த பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவம் ஒழுக்க நிருவாக பணிப்பாளர் பிரிகேடியர் அனில் இளங்கக்கோன், மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் நிலையத் தளபதி கேணல் லக்ஷ்மன் பமுனுசிங்க உட்பட பல சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர். bridge media | Nike