Header

Sri Lanka Army

Defender of the Nation

29th November 2020 06:00:37 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி படையினருக்கு உரையாற்றல்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜேனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்கள் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை 2020 நவம்பர் மாதம் 28 ஆம் திகதி 65 வது படைப்பிரிவிற்கு மேற்கொண்டார். குறித்த விஜயமானது மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் பிரிக்கப்படுவதற்கு முன்னர் படையினர் மத்தியில் உரையாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டது.

65 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதியவர்களை 65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்க அவர்கள் வரவேற்றதோடு, அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

பின்னர், தளபதி குழு புகைப்படத்தில் கலந்து கொண்டார். அவர் 65 வது பிரிவின் படையினர் மத்தியில் உரையாற்றியதோடு, அனைத்து படையினரும் கிளநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையத்திற்கு வழங்கிய பயனுள்ள சேவைகளைப் பாராட்டினார்.

விஜயத்தின் ஞாபகார்த்தமாக பாதுகாப்பு படைத் தலைமைக தளபதி தலைமையக வளாகத்தில் மரக்கன்றினை நட்டுவைத்ததுடன் அதிதிகள் புத்தகத்திலும் பதிவிட்டார். Sports Shoes | Men's Footwear