30th November 2020 14:22:18 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12 ஆவது படைப்பிரிவின் படையினர் 121 ஆவது பிரிகேட், 20 ஆவது இலங்கை சிங்க படையணி மற்றும் 18 ஆவது கெமுனு ஹேவா படையினர் 'ஹுஸ்ம தென துரு' (மூச்சுத் தரும் மரங்கள்) எனும் தேசிய மர நடுகை திட்டத்திற்கு அமைய மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து (27) வியாழக்கிழமை வெல்லவாய சபுகொடகந்த மலைப்பகுதிகளில் 500 க்கும் அதிகமான மரக்கன்றுகளை நாட்டினர்.
மலைப்பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட தீ பரவலை கருத்திற்கொண்டு இத் திட்டமானது 12 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய இப் பிரதேசத்தில் இழுப்பை, குமுதம், கடம்பம் போன்ற மரங்களை நாட்டினர்.
இந்த திட்டமானது ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு எனும் திட்டத்தின் ஊடாக புதிய காடு வளர்ப்புத் திட்டத்தின் ஊடாக நாடு முழுவதும் 2 மில்லியன் மரக்கன்றுகளை நாட்டி நாட்டின் வனப்பகுதியை 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் 12 ஆவது படைப்பிரிவு மற்றும் 121 பிரிகேட் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரிகளுடன் 121 ஆவது பிரிகேட் தளபதி கேணல் உதய சேரசிங்க, வனத் திணைக்கள அதிகாரிகள் இணைந்திருந்தனர். Running Sneakers | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today