Header

Sri Lanka Army

Defender of the Nation

26th November 2020 11:42:02 Hours

இராணுவத்தினரால் நிவாரணப் பொதிகள் வழங்கல்

இராணுவத்தின் ஒருங்கிணைப்பில் மெல்வா குழுமத்தின் ஒத்துழைப்புடன் கொழும்பு 15 மோதர, பன்சலவத்தை , மோதரவெல்ல, மோதர வெல்லவத்தை, ஹன்சா பிரதேசம் மற்றும் மசூதி வீதி ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் நிவாரணப் பொதிகள் 1000 புதன்கிழமை (25) ஆம் திகதி வழங்கப்பட்டது.

கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மைய தலைவரும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் கொவிட் 19 தொற்றினை ஒழிக்கும் முயற்சியை பாராட்டு முகமாக நன்கொடையாளரான மெல்வா குழுமத்தின் பணிப்பாளர் கேணல் (ஓய்வு) மஹிந்த ரத்ன தென்னகோன் அவர்களால் 142 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிலந்த பெர்னாண்டோ அவர்களிடம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நன்கொடைகளை கையளித்தார். இந்த திட்டமானது 14 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது.

இந்த நிவாரண பொதிகளில் சுமார் ரூபா 1800 பெறுமதிக்கு அரிசி 5 கிலோ, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு , கடலை, மாவு, நூடுல்ஸ், சோயா, டின் மீன், சீனி, நெத்தலி, மசாலா மற்றும் சில அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கப்படிருந்தன.

14வது விஜயபாகு காலாட் படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஈ.எம்.எம்.எஸ்.கே ஏக்கநாயக்க, மற்றும் படையினர் உட்பட மோதர பொலிஸ் நிலைய உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் இணைந்து இந்த நிவாரண பொதிகளை வழங்கினர். Asics footwear | Nike Running