Header

Sri Lanka Army

Defender of the Nation

25th November 2020 10:14:05 Hours

புதிய இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி மின்னேரிய பீரங்கி வளாகத்திற்கு விஜயம்

அண்மையில் இலங்கை பீரங்கி படையின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடை அவர்கள் 2020 நவம்பர் மாதம் 22 -23 திகதிகளில் மின்னேரிய பீரங்கி படை வளாகத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

படைத் தளபதிக்கு பீரங்கி படை நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு பீரங்கி படை பயிற்சி பாடசாலை தளபதியினால் வரவேற்கப்பட்டார். நிகழ்வில் பீரங்கிப் படை பிரிகேட்டின் தளபதி வரவேற்பு உரையையும் பீரங்கி வளாகத்தின் பயிற்சி மற்றும் நிர்வாக அம்சங்கள் பற்றிய சுருக்கமான விளக்கத்தையும் அளித்தார். அதனைத் தொடர்ந்து 7 வது பீரங்கி படையின் கட்டளை அதிகாரி மற்றும் துப்பாக்கிதாரிகள் கழகத்தின் பொறுப்பதிகாரி ஆகியோர் தங்களின் துறைகள் பற்றிய விளக்கங்களை வருகை தந்த மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடைக்கு விளக்கினர்.

படையினருக்கான உரையாற்றுகையில் பயிற்சிகளின் நோக்கங்கள் பல்வேறு தொழில்முறை அம்சங்கள் பயிற்சியின் முக்கியத்துவம், உயர்ந்த தர ஒழுக்கத்தினை பராமரித்தல் தொடர்பாக வலியுறுத்தினார்.

விஜயத்தின் போது பீரங்கி படை பயிற்சி பாடசாலை , பீரங்கி படை பிரிகேட் தலைமையகம் , 7 பீரங்கி படை முகாம் மற்றும் பீரங்கி மின் இயந்திர மற்றும் பொறியியல் படை ஆகியவற்றில் நடைபெற்று வரும் கட்டுமானங்கள் மற்றும் புனரமைப்புகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் தங்குமிட வசதிகள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

எண்ரொய்ட் தொழிற்பாட்டு முறைமையை அடிப்படையாகக் கொண்ட பீரங்கி பயிற்சி பாடசாலையின் சிறிய இலக்கு தளத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய இலக்கு அமைப்பினை பார்வையிட்டார். மேலும், பீரங்கி வளாகத்தில் உள்ள கிரிக்கெட் மைதானம், கூடைப்பந்து தொகுதி , ஸ்கோஸ் திடல் மற்றும் டென்னிஸ் திடல் போன்ற சில விளையாட்டு அரங்குகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை அவர் வழங்கியபோது விளையாட்டு நடவடிக்கைகள் குறித்த அவரது ஆர்வம் காட்டினார். இவ்விரண்டு நாள் பயணத்தின் போது பீரங்கி படை வளாகத்தின் அனைத்து அதிகாரிகளுடன் நல்லுரவு நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டார். . affiliate link trace | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp