24th November 2020 10:15:37 Hours
வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி பிரிகேடியர் வண்டித மஹிங்கந்த திங்கட்கிழமை (23) காங்கேசன்துறை மயிலடி 4வது இலங்கை இராணுவ பொலிஸ் படை முகாமுக்கு விஜயம் செய்தார்.
வருகை தந்த தளபதியை 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஆர்.ஆர்.பி பெரேரா அவர்கள் வரவேற்றார். மேலும் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் விஜயத்தின் நினைவாக பிரிகேடியர் வண்டித மஹிங்கந்த வளகத்தில் மரக்கன்று நாட்டினார். அவர் முகாம் படையினருடன் எண்ணங்களை பரிமாற்றிக் கொண்டதுடன் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்திலும் பங்குக் கொண்டார்.
சுகாதார அதிகாரிகள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. latest jordans | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ