26th November 2020 09:24:20 Hours
இன்று (26) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 502 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டவர்கள். குறித்த தொற்றாளர்களில் 262 பேர் கொழும்பு மாவட்டம், 90 பேர் கம்பஹா மற்றும் 46 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இன்று (26) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,934 பேர் ஆகும். அவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் கொத்தணியில் 3,059 பேரும், கொழும்பு மீன் சந்தை கொத்தணி 14,875 ஆவர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணி தொற்றாளர்களில் மொத்தம் 12,014 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர்.
அதன் பிரகாரம் 25 ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 21,468 ஆகும். அவர்களில் 15,446 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 5,926 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்திற்குள் முழுமையாக சுகமடைந்த 485 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதனடிப்படையில் இதுவரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 96 ஆகும். நேற்று இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 02 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் கொழும்பு 12, மற்றும் பன்னிப்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று (26) காலை தோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 50 பயணிகளும், ஓமானிலிருந்து WY 371 விமானம் ஊடாக 35 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை (26) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 47 தனிமைப்படுத்தல் மையங்களில் 4,894 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 25 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 10,400 ஆகும். Running Sneakers | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff