Header

Sri Lanka Army

Defender of the Nation

24th November 2020 10:26:37 Hours

532 ஆவது பிரிகேட் தளபதி கடமையேற்பு

532 ஆவது பிரிகேட்டின் தளபதியாக பிரிகேடியர் அனில் பெரேரா அவர்கள் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் வவுனியா வெல்லாங்குளம் தலைமையகத்தில் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கடமையேற்றார்.

53 ஆவது படைப்பிரிவின் 532 வது பிரிகேட்டின் புதிய தளபதியை பதவி நிலை அதிகாரிகளால் வரவேற்கபட்டதை தொடர்ந்து 4 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரிகேடியர் அனில் பெரோ அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் உத்தியோக பூர்வ ஆவனத்தில் கையெப்பமிட்டு கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் அனில் பெரேரா முழங்காவில் 651 ஆவது பிரிகேட்டின் தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

நிகழ்வில் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்து பிரிகேட் வளாகத்தில் மரக்கன்று நாட்டுதல் அதிகாரிகளுக்கான உரை என்பன இடம்பெற்றன. . இந் நிகழ்வில் கட்டளை அதிகாரிகள் மற்றும் பிரிகேட் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

532 ஆவது பிரிகேட்டின் தளபதியாக பணியாற்றிய கேணல் சமன் சேனரத்ன வெளிநாட்டுப் பயிற்சி நெறிக்கு சென்றதன் நிமித்தம் இப் பதவிக்கு பிரிகேடியர் அனில் பெரேரா நியமிக்கப்பட்டார். Nike Sneakers Store | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp