Header

Sri Lanka Army

Defender of the Nation

25th November 2020 12:22:08 Hours

சுதந்திர சதுக்கத்தில் ஒரு வார பிரித் பாராயணம் முடிகிறது

நாட்டிற்கு ஆசீர்வாதம் மற்றும் பரவுகின்ற தொற்று நோயிலிருந்து விடுபட வேண்டி சுதந்திர சதுக்கத்தில் மூன்று வார தொடர்ச்சியான பகல் இரவு பிரித் பாராயணத்தின் முதல் கட்டம் (ஏழு நாட்கள்) செவ்வாய்க்கிழமை (24) பாரம்பரிய மரபுகளுக்கு ஏற்ப மாலை நிறைவு பெற்றது. இது தொடர்ச்சியாக 2020 டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை நடைபெறும்.

கௌரவ சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர, அரச உயரதிகாரிகள், இராணுவத் தளபதி லெப்டிணட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று நாயகம் மேஜர் ஜெனரல் ஜெனரல் சேன வடுகே அனுசரனையாளரான எல்.ஓ.எல்.சி நிறுவன தலைவர் திரு இஷார நானாயக்கர மற்றும் அவரது மனைவி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர். மகா சங்கா இறுதி மந்திரத்தை (ஹமாரா பிரிதா) வழங்கினார்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் பேரில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்த பிரித் பராயண நிகழ்வு பாதுகாப்பு செயலாளர், சகோதரி சேவைகள் (வான்படை, கடற்படை), பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளின் சிறந்த ஒத்துழைப்புடன் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள ஸ்ரீ கல்யாணி யோகஷர்மா துறவற விகாரையின் தலைமை தேரர் வணக்கத்திற்குரிய பாஹல விட்டியெல ஜனானந்தபிதான தேரர் அவர்களின் ஆலோசணைக்கமைவாக அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

மத அனுஸ்டாங்களின் பின்னர் வணக்கத்திற்குரிய பௌத்த தேரர்களின் இறுதி பிரித் பாராயணம் இன்று (25) செய்யப்பட்டு மேலும் ஒரு வாரத்திற்கான இரண்டாம் கட்டம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாபா அபேவரவர்தன, லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, திருமதி சுஜீவா நெல்சன் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் இலங்கை விமானப்படைக்கு ஒப்படைக்கப்பட்டது. இறுதி கட்டம் கடற்படைக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

21 நாள் பிரித் பாராயணத்தின் பின்னர் ஆசீர்வதிக்கப்பட்ட 100,000 'பிரித்' நீர் கொள்கலன்கள் அனைத்து முப்படை சேவை நிலையங்கள், பொலிஸ் நிலையங்கள், நாட்டில் கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சுகாதார ஊழியர்களிடையே விநியோகிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல் தெய்வீக ஆசீர்வாதங்களுக்காக ஆசீர்வதிக்கப்பட்ட தண்ணீரை ஆகாயத்தில் இருந்து தெளிப்பதற்கும் மேலும், இந்த நிகழ்வின் ஊடாக நாடு முழுவதும் உள்ள விகாரைகளுக்கு 700 புத்தர் சிலைகள் விநியோகிக்கப்பட உள்ளன. Nike shoes | Nike Dunk - Collection - Sb-roscoff