23rd November 2020 18:19:28 Hours
அன்மையில் கடமையை பொறுப்பேற்ற வன்னி பாதுகாப்பபடைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் அனுராதபுரம் 21 ஆவது படைப்பிரிவு மற்றும் அதன் கீழ் உள்ள அலகுகளுக்கு 2020 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
21 ஆவது காலாட் படைப் பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு நுலைவாயிற் பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து 21 ஆவது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து படைத் தலைமையக வளாகத்தில் மாங் கன்றும் நாட்டி வைத்தார்.
அதன் பின்னர், வருகை தந்த வன்னி தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு 21 ஆவது படைப்பிரிவின் வகிப்பங்கு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான விளக்கமளிக்கப்பட்டி. பின்னர் 213 பிரிகேட், கஜேந்திரபுரம் பிராந்திய போர் கருவிகள் சாலை, 5 ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட்படை மற்றும் 2 ஆவது பொறியியற் காலாட்படை முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் 21 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, வன்னி பாதுகாப்பு படைப் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் நலின் கொஸ்வத்த, 213 பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரசிக்க குமார, 21 ஆவது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் கலந்து கொண்டனர். short url link | Air Jordan Release Dates 2020