Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd November 2020 11:03:11 Hours

ஞாயிறு 12,095 பீசிஆர் பரிசோதனைகள்

இன்று (23) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 400 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 09 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இலங்கையை சேர்ந்தவர்களாவர். குறித்த தொற்றாளர்களில் 121 பேர் கொழும்பு மாவட்டம், 112 பேர் கம்பஹா மற்றும் 27 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று (23) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 16,639 பேர் ஆகும். அவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை 3,059, மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொற்றாளர்களில் 13,580 பேர் உள்ளடங்குவர். மேலும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 10,503 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் 22 ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,170 ஆகும். அவர்களில் 14,068 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று காலை வரை 6,015 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (23) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 04 மரணங்கள் பதிவாகியுள்ளது. அவர்கள் கொழும்பு 10, கொழும்பு 12, கொழும்பு 15, மற்றும் பொரல்லை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அதனடிப்படையில் 23 ஆம் திகதி காலை வரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 87 ஆகும்.

இன்று காலை (23) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 479 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று (23) காலை டோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 25 பயணிகளும், குவைத்தில் இருந்து UL 230 விமானம் ஊடாக 297 பயணிகளும், ஜப்பானில் இருந்து UL 455 விமானத்தினூடாக 02 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று காலை (23) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 42 தனிமைப்படுத்தல் மையங்களில் 4,501 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று நவம்பர் 22 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 12,095 ஆகும். jordan Sneakers | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News