Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd November 2020 21:32:07 Hours

இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு குழுவினரின் செயல் விளக்க காட்சி நிகழ்வில் இராணுவத் தளபதி பங்கேற்பு

இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மையத்தில் (SLACDRT) 40 நாட்கள் இல -7 அடிப்படை அனர்த்த மீட்பு பாடநெறியினை நிறைவு செய்தவர்களினால் இன்று (22) காலை கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் விரிவான செயல் விளக்க காட்சியானது அளிக்கப்பட்டது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவ தளபதியும், கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டு தனது பாராட்டினைத் தெரிவித்தார்.

நிலச்சரிவு மீட்பு நடவடிக்கைகளில் சர்வதேச தரத்தினை கொண்டதும், தகர்ந்துபோன இடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணி செயல்பாடுகள், அவசர வெள்ள அனர்த்த நடைமுறைகள் மற்றும் தேசிய பேரழிவு காலங்களில் பலசெயற்பாடுகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட செயற்பாடுகளில் இராணுவத்தில் திறமை பெற்ற பாடநெறிகளை நிறைவு செய்து வெளிச் செல்லும் 03 அதிகாரிகள் மற்றும் 136 ஏனைய இராணுவச் சிப்பாயினர் தங்களது திறமைகளை குறித்த விளக்க காட்சியில் வெளிப்படுத்தினர். இக் குறித்த நிகழ்வில் பொது பதவி நிலை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா, நடவடிக்கை பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, பயிற்சி பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத், மத்திய பாதுகாப்பு த லைமையக தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரண, 58 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ, இராணுவ தலைமையகத்தின் பணிப்பாளர்கள், இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மையத்தின் தளபதி கேணல் சுசந்த அமரசேகர, அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில், அன்றைய பிரதம அதிதிக்கு இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மையத்தின் பங்கு மற்றும் பணிகள் மற்றும் 58 வது படைப் பிரிவின் பொறுப்பின் பகுதி குறித்த வீடியோ ஆவணப்படத்தல் திரையிடப்பட்ட பின்னர் அவர் இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மைய(SLACDRT) வலைத்தளத்தினை (https://alt.army.lk/cdmt/) ஆரம்பித்து வைத்தார்.

அவசரகால தயார்படுத்தல், விரைவான செயற்பாடுகள் , பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வது, தகவல் தொடர்பு வலையமைப்பு, நிர்வாக நடைமுறைகள், அந்தந்த பணியாளர்களை அணிதிரட்டுதல், சிறந்த மூலோபாய அணுகுமுறைகளைத் தேர்ந்தெடுப்பது, சொந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், சேதம் / நெருக்கடியை சரியான மதிப்பீடு செய்தல்,தொழில்நுட்ப உதவிகளை பயன்டுத்தல்,கட்டமைப்பு தடுப்பு நடவடிக்கைகள், கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல்,விபத்துக்கள் வெளியேற்றப்படுதல், சொந்த அபாயங்களைக் குறைத்தல், உடனடி முதலுதவி உதவிகளை வழங்குதல், புத்துயிர் பெறுதல் செயல்முறை,வெளிப்புறக் காயங்களிலிருந்து பாதுகாப்பு, மற்றும் ஏனைய விடயங்கள் உள்ளிட்ட விளக்க காட்சியானது இந்த நிகழ்வின் போது இடம்பெற்றன.குறித்த விளக்க காட்சிக் செயல்பாட்டிற்கு முன்னர் அது தொடர்பான ஒரு சுருக்கமான விளக்கமானது அன்றைய பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

பின்னர், இராணுவத் தளபதி பாடநெறியினை பூர்தி செய்தவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் மற்று ஏனைய இராணுவ சிப்பாயினர் மத்தியில் உரையாற்றினார்,மேலும் நேரத்தில் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் முன்னோடியான அவர்களின் திறன்கள் மற்றும் தேசிய கடமைகளை நிறைவேற்றுவதற்கான தயார்நிலை ஆகியவற்றைப் பாராட்டினார்,. "நாங்கள் செய்யும் எந்தவொரு காரியமும் ஒருவித அபாயங்களைக் கொண்டிருக்கிறது, அவற்றைப் பற்றி அறிந்திருப்பது எல்லா முயற்சிகளிலும் மிகவும் நடைமுறை மற்றும் முக்கியமான விஷயம். எங்கள் நாட்டில் அந்த சவால்களை எதிர்கொள்ள நீங்கள் எவ்வளவு உன்னிப்பாக தயாராக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு நிரூபித்துள்ளீர்கள். அறிவு மற்றும் இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மையத்தினால் வழங்கப்பட்ட அறிவு மற்றும் நடைமுறை பயிற்சியானது சர்வதேச தரத்தினை கொண்டவை. இதற்காக நான் பயிற்சியாளர்களைப் பாராட்ட வேண்டும். இது சரியான நேரத்தில் தேவை "என்று லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டார்.

வருகை தந்த இராணுவத் தளபதிக்கு படையினரால் இராணுவ மரியாதை வழங்கியதனைத் தொடர்ந்து, பொது பதவி நிலை பணுப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா, நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத், மத்திய பாதுகாப்பு தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரண, 58 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ ஆகியோர் வரவேற்றனர்.

கொத்மலையிலுள்ள இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மையத்தில் அவசரகால தயார்படுத்தல் தேவையை நிவர்தி செய்யும் முகமாக இதுவரை 77 இராணுவ அதிகாரிகள் மற்றும் 1221 ஏனைய இராணுவச் சிப்பாயினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, அதற்கு மேலதிகமாக கடற்படை, விமானப்படை, விசேட பொலிஸ் அதிரடிப் படை, பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகள் , முதுமாணி பட்டப் படிப்பினை தொடரும் மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பேரழிவு மீட்பு மற்றும் கோட்பாடுகள், நீர், வரையறுக்கப்பட்ட இடங்கள், நிலச்சரிவுகள், கயிறு போன்ற மீட்பு நடவடிக்கையின்போதான முகாமைத்துவம் ஆகியவற்றினை குறித்த பயிற்சியில் உற்று நோக்கப்பட்டதுடன் மற்றும் பயிற்சி செயற்பாடானது பாதுகாப்புத் தலைமை பிரதானி மற்றும் இராணுவத் தளபதி வழங்கிய வழிகாட்டுதலின் கீழ் 58 வது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மையத்தின் தளபதி ஆகியோரின்மேற்பார்வையின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது பொதுவான தேடல் மற்றும் மீட்பு பணிகள், நீர் மீட்பு பணிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட மீட்பு பணிகள் மற்றும் செயல்பாட்டு அம்சங்களை பயிற்சி செய்வதற்கும், பேரழிவுகள் ஏற்பட்டால் முகாம் மேலாண்மை அமைப்புகளை நடத்துவதற்கான ஐ.நா. தரநிலைகள் குறித்த அறிவை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக, பேரழிவு மீட்பு , முகாமைத்துவ மற்றும் மீட்பு நடவடிக்கையானது நிலையான மற்றும் விரிவான பயிற்சிகளில் ஒன்றாக பேரழிவு மீட்பு அறிவு மற்றும் மனிதாபிமான உதவி பற்றிய மதிப்புமிக்க இராணுவ அனுபவங்களை வழங்குவதோடு மற்றும் எதிர்காலத்தில் இராணுவ ஆர்வலர்களின் தலைமுறைக்கான நலனுக்காக கொண்டவையாக காணப்படுகின்றது. கொத்மலை பிரதேசத்தில் இடம்பெற்ற பயிற்சியில் இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மையத்தின் தளபதியும் இணைந்து கொண்டார்.

இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மையத்தின் பாராட்டின் நிமித்தம் இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. Running sports | UK Trainer News & Releases