20th November 2020 22:00:06 Hours
இன்று (22) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 491 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டில் இருந்து இலங்கை வருகை தந்த 03 பேரும், துருக்கியில் இருந்து இலங்கை வருகை தந்த துருக்கியைச் சேர்ந்த ஒருவரும் மற்றும் ஏனைய 487 பேர் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளவர்களாவர். குறித்த தொற்றாளர்களில் 292 பேர் கொழும்பு மாவட்டம், 87 பேர் கம்பஹா மற்றும் 17 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (22) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 16,248 ஆகும். அவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி - 3,059 மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி - 13189 பேர் உள்ளடங்குவர். மேலும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 10,024 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதன் பிரகாரம் 21 ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,770 ஆகும். அவர்களில் 13,589 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும், 6,098 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றுவரை கொவிட்-19 தொற்று காரணமாக 09 மரணங்கள் பதிவாகியுள்ளது. அவர்கள் கொழும்பு 02, வெல்லம்பிட்டிய, தெமடகொட, கொழும்பு 10, கொழும்பு 13, வெள்ளவத்தை, மற்றும் வத்தலை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அதனடிப்படையில், இது வரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 83 ஆகும். மேலும் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 319 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று (22) காலை டோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 41 பயணிகளும், துபாயில் இருந்து UL 226 விமானம் ஊடாக 52 பயணிகள் கொழும்பு வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப் படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று காலை (22) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 39 தனிமைப்படுத்தல் மையங்களில் 4193 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 21 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 10,514 ஆகும். Nike shoes | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat