Header

Sri Lanka Army

Defender of the Nation

20th November 2020 23:25:47 Hours

முட்டையிடும் கோழி வளர்ப்பு & ஏனைய விவசாயம் உள்ளிட்ட பண்ணை ஆரம்பிப்பு

வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகம் அதன் செயற்பாட்டை மேம் படுத்தி கொள்ளும் நிமித்தம், முட்டையிடும் கோழி வளர்ப்பு , மஞ்சள் பயிரிடல் மற்றும் மகாவ பலல்லயில் தக்காளி சோஸ் உற்பத்தி உள்ளடங்களான மற்றுமொரு இராணுவ பண்ணையானது வியாழக்கிழமை (19) ஆம் திகதி ஆரம்பித்துள்ளது.

இராணுவத்திற்கு சொந்தமான 15 ஏக்கர் நில பரப்பளவில் உள்ள புதிய பண்ணையில் 25,000 கோழிகள் இந்த பண்ணை மூலம் வளர்க்கப்பட்டு மேற்கு பாதுகாப்பு படையின் கீழ் சேவையாற்றுமபைடையினரின் முட்டை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் இந்திராஜித் கந்தனராச்சி அவர்கள் ( 19) ஆம் திகதி 100,000 முட்டைக் கோழி குஞ்சுகளுடன் குறித்த திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இந்த பண்ணையின் மூலம் இராணுவத்தின் தினசரி உணவு தேவையை பூர்தி செய்து செய்யும் என்றும், அதிகப்படியான பங்குகளை இராணுவ நலன்புரி கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இராணுவத் தளபதியின் ஆசீர்வாதத்துடன், 5வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படையினரால் நிர்வகிக்கப்படும் அதே பண்ணையில் மஞ்சள் திட்டத்தையும், தக்காளி சோஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையையும் உள்ளூர் தக்காளி விவசாயிகளின் அதிகப்படியான அறுவடைகளை வாங்குவதன் மூலம் தொடங்க உள்ளது.

5வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ரஜநாயக்க, பண்ணையின் கட்டளை அதிகாரி, விவசாய உத்தியோகத்தர்கள் ளமற்றும் படையினர் சுகாதார வழிகாட்டுதல்கமைய கலந்து கொண்டனர். buy footwear | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ