20th November 2020 13:04:29 Hours
இன்று (21) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 439 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டில் இருந்து இலங்கை வருகை தந்த கப்பல் பாதுகாவலர் உட்பட வெளிநாட்டவர்கள் மூன்று பேர் மற்றும் வெளிநாட்டில் இருந்து இலங்கை வருகை தந்த இலங்கை கப்பல் பாதுகாவலர் ஒருவரும் மற்றும் ஏனைய 435 பேரும் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளவர்களாவர். குறித்த தொற்றாளர்களில் 160 பேர் கொழும்பு மாவட்டம், 71 பேர் கம்பஹா மற்றும் 21 பேர் களுத்துரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (21) 6.00 காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 15761 பேர் ஆகும். அவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 3,059 பேரும் மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் 12702 பேரும் உள்ளடங்குவர். மேலும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 9905 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதன் பிரகாரம் 20 ஆம் திகதி வரையான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19279 ஆகும். அவர்களில் 13270 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 5,935 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்திற்குள் கொவிட்-19 தொற்று காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது. அவர் கொம்பனி தெருவைச் சேர்ந்தவராவர். அதனடிப்படையில் 21 ஆம் திகதி காலை வரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 74 ஆகும். (கடந்த 24 மணி நேரத்திற்குள்) வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து 368 பேர் முழுமையாக சுகமடைந்த வெளியேறியுள்ளனர்.
கொவிட்-19 தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய முதலாவது மற்றும் இரண்டாவது தொடர்பாளர்கள் மொத்தமாக 30000 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
இன்று (21) காலை அபுதாபியில் இருந்து EK 667 விமானம் ஊடாக 21 பயணிகளும், டோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 42 பயணிகளும், இந்தியாவில் இருந்து UL 1026 விமானம் ஊடாக 58 பயணிகளும்,தோகா கட்டாரில் இருந்து UL 218 விமானம் ஊடாக 296 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை (21) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 38 தனிமைப்படுத்தல் மையங்களில் 3,894 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 20 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 11398 ஆகும். Buy Kicks | Jordan Ανδρικά • Summer SALE έως -50%