Header

Sri Lanka Army

Defender of the Nation

16th November 2020 14:30:58 Hours

குட்டிகல பண்ணையில் மீன் வளர்ப்பு திட்டம் முன்னெடுப்பு

மீன் வளர்ப்பை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன், 1ஆவது இலங்கை இராணுவ பொது சேவை படையணியினரால் குட்டிகலயில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பொது சேவை படையணி பண்ணையில் சனிக்கிழமை (7) ஆம் திகதி மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

1 ஆவது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சி.எஸ். தேமுனி அவர்கள் மீன் வளர்ப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்துடன், படையினர்களுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் 1 ஆவது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் படையினர் பலரும் கலந்து கொண்டனர். Running sports | Archives des Sneakers