20th November 2020 08:20:56 Hours
அண்மையில் மேஜர் ஜெனரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட 62 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களுக்கு 2020 நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பு 15,ரொக் ஹவுஸில் உள்ள இலங்கை படைக்கல சிறப்பணி தலைமையகத்தில் படையினரால் கௌரவிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அவர் படையணியின் மத்திய கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுமித் தேவப்பிரிய அவர்களினால் வரவேற்கப்பட்டதோடு,இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படையினரால் இராணுவ மரபுகளுக்கு இணங்க மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களுக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர், அவர் கொவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்களையும் கடைப்பிடித்து அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் அனைத்து படையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் அவர் கலந்து கொண்டார். bridgemedia | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival