20th November 2020 09:20:56 Hours
எதிர்காலத்தில் கொவிட்-19 தொற்றாளர் அதிகரிக்கும் சந்தர்பத்தில், அதனை எதிர்கொள்வதற்காக , சுகாதார வைத்திய அதிகாரி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக 61 ஆவது படைப்பிரிவின் 613 ஆவது பிரிகேட் தலைமையக படையணியினரால் வெலிகம ஆதார வைத்தியசாலையில் மூன்று விடுதிகள் புனரமைக்கப்பட்டு இடைநிலைசிகிச்சை மையமாக மாற்றியமைக்கப்பட்டது.
61 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 613 ஆவது பிரிகேட் தளபதி கேணல் உபுல் கொடித்துவக்கு அவர்களின் மேற் பார்வையின் கீழ் 613 ஆவது பிரிகேட் தலைமையகத்தினால் குறித்த இடைநிலைசிகிச்சை மையமாக மாற்றியமைக்கும் திட்டம் அரசாங்கத்தின் அவசர முன்னெடுத்பு திட்டத்திற்கமைவாக முன்னெடுக்கப்பட்டது. கம்புருபிட்டிய மற்றும் கரந்தெனிய வைத்தியசாலைகளில் ஏற்கனவே குறித்த இடைநிலைசிகிச்சை மையமாக மாற்றியமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஒக்டோபர் 02 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட இத்திட்த்திற்கு 613 ஆவது பிரிகேட் தலைமையகத்தின் படையினர் மற்றும் 3 வது (தொண்டர் ) கெமுனு ஹேவா படையணியினர் பெரிதும் பங்களிப்பு வழங்கினர் Best Sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%