05th November 2020 15:00:48 Hours
மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரண, புதன்கிழமை (4) தான பதவியேற்ற பின்னர் 121 வது படைப் பிரிவு மற்றும் அதன் கட்டளையின் கீழ் உள்ள படைப் பிரிவுகளுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார்.
விஜயத்தை மேற்கொண்ட தளபதியை 121 படைப் பிரிவின் படைத் தளபதி கேணல் உதய சேரசிங்க அவர்கள் வரவேற்றார். பின்னர் அவர் மத்திய தளபதியிடம் தனது பொறுப்புள்ள பகுதியில் தலைமையகங்களை செயல்படுத்துவது குறித்து விளக்கினார்.
அதன்பிறகு, அவர் 23 வது கஜபா படையணி, 20வது இலங்கை சிங்க படையணி மற்றும் 18வது கெமுனு ஹேவா பட்டாலியன்களை பார்வையிட்டார்.மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி கடமையிலுள்ள படையினரின் தங்குமிடம் மற்றும் வீதி தடை கடமைகளையும் அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பையும் ஆய்வு செய்தார். இறுதியாக, அவர் அந்த முகாம்களை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அதிதிகள் புத்தகங்களில் குறிப்புக்களை எழுதினார்.
மேலும், சித்துல்பவ்வ ரஜமகா விகாரைக்குச் சென்று தலைமை தேரரை சந்தித்தார். தலைமை தேரருடனான குறித் சுருக்கமான உரையாடலின் போது, அவர் சில எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். குறித்த விஜயத்தில் 12வது படைப் பிரிவு மற்றும் 122வது பிரிகேட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். latest Nike Sneakers | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News