18th November 2020 08:00:29 Hours
ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்களுக்கு கனேமுல்லையில் அமைந்துள்ள கொமாண்டோ படையணி தலைமையகத்தில் வரவேற்பு மரியாதை மற்றும் கௌரவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டன.
மரியாதை அணிவகுப்பிற்கு பின்னர் உயிர் நீத்த கொமாண்டோ போர் வீரர்களின் நினைவுச்சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் படையணியின் ஏனைய இராணுவ சிப்பாயினர் மத்தியில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், கொமாண்டோக்களின் மதிப்பு மற்றும் பணிகளைச் செய்வதற்கு சிறந்த உடல் திறன் அளவைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கினார்,கொமாண்டோக்களின் பெயரை நிலைநிறுத்த படையினரின் ஒழுக்கத்தை கடை பிடிக்கும்மாறும் வலியுறுத்தினார்.
அதன்பிறகு, தான் ஓய்வு பெற்று செல்வதன் நினைவாக ஒரு மா மரக்கன்றை நட்டுவைத்தார். பின்னர் படையணியில் உள்ள அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.அதிகாரிகளுக்கான தனது உரையில், அவர் இராணுவத்தில் தனது வாழ்நாள் அனுபவங்களை நினைவு படுத்தியதுடன், அனைத்து அதிகாரிகளுக்கும் படையணியின் வெற்றிக்கு இட்டுச்செல்ல உடல் நிலையை பராமரிக்கவும், நல்ல ஒழுக்கத்தை பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து கோப்ரல் உணவக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவு விருந்தோம்பலின் பின்னர், ஓய்வுபெற்று செல்லும் மேஜர் ஜெனரல் அவர்களுக்கு அனைத்து கொமாண்டோக்களும் மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
ஓய்வுபெற்று செல்லும் மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்கள் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் அவரது பாரியாருடன் இரவு விருந்தோம்பலில் கலந்து கொண்டார்.பின்னர் அவருக்கு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா மற்றும் கொமாண்டோ படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனுஜா டி சில்வா ஆகியோர் தங்களது பாராட்டுக்கான அடையாளமாக திருமதி குஷ்மி சேனாரத்னவுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
பின்னர், மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்கள் ஒரு சிறப்பான உரையை நிகழ்த்தினார் மற்றும் இலங்கை இராணுவத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக தனது கடமையின் செயல்பாட்டை நிறைவேற்ற உதவிய அனைத்து கட்டளை அதிகாரிகள், சகாக்கள் மற்றும் இளம் அதிகாரிகள் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். bridgemedia | Nike