Header

Sri Lanka Army

Defender of the Nation

20th November 2020 23:27:56 Hours

இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியின் புதிய படைப் பிரிவு ஆரம்பம்

இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியானது, இன்று (18) தனது புதிய முதல் இராணுவ பொறியியலாளர்கள் படைப் பிரிவை அனைத்து தேச-கட்டிட பொறியியல் பணிகளையும் ஒருங்கிணைத்தல், மேற்கொள்வது, விநியோகித்தல் மற்றும் நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பித்துள்ளது. இதில் மத்தேகொடையிலுள்ள இலங்கை இராணுவ பொறியியலாளர் தலைமையக வளாகத்தில் ஒரு புதிய பிரிவு தலைமையகத்தை நிர்மாணிப்பதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

இலங்கை பொறியாளர்கள் படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் இந் நிகழ்வுக்கு பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும், கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பிதம அதிதியாக கலந்து கொண்டார். அங்கு வருகை தந்த பிரதம அதிதியை அவர் வரவேற்றார். புதிய பிரிவு வளாகத்தில் இராணுவ மரபுகளுக்கு இணங்க அன்றைய பிரதம அதிதிக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

தேசிய கட்டுமான திட்டங்கள் தொடர்பான அனைத்து ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாடுகளையும் சுமுகமாக எளிதாக்கும், சிவில்-இராணுவ பணிகள், மனிதாபிமான நிர்ணயம் மற்றும் வேதியியல் உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி (சிபிஆர்என்) பணிகள், அவசரகால இடர் முகாமைத்துவம் , தளபதியின் பணிகள் போன்றவை உள்ளடக்கிய புதிய பிரிவு தலைமையக கட்டிட வளாகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லினை லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் நட்டார். பின்னர், லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய பொறியாளர்கள் பிரிவின் உத்தியோகபூர்வ தொடக்கத்தை கையொப்பமிடுவதன் மூலம் அடையாளப்படுத்தினார். அன்றைய பிரதம விருந்தினரும் பார்வையாளர்களின் புத்தகத்தில் அதே நேரத்தில் சில பாராட்டுக்குரிய கருத்துக்களை குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, திட்டத்தின் பின்னணியில் உள்ள லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா முக்கியமான நாளின் நினைவகத்தின் அடையாளமாக படைத் தலைமையகத்தில் ஒரு மரக்கன்றையும் நட்டார்.சில நிமிடங்களுக்குப் பிறகு, சேப்பர்ஸ் லெஷர் பேவில் புதிதாக கட்டப்பட்ட பெட்மிடன் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் கட்டிடத் தொகுதியினை இராணுவத் தளபதி திறந்து வைத்தார்.பின்னர், இராணுவத் தளபதியவர்களுக்கு இராணுவ வேதியியல் உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படை உறுப்பினர்களினால் இரசாயன அச்சுறுத்தல்கள், வெடிபொருள் அகற்றுதல் மற்றும் எல்லா நேரங்களிலும் அவற்றின் தயார்நிலை போன்றவற்றுக்கு எதிரான செயல்பாட்டு அம்சங்கள் முன்வைக்கப்பட்டன. மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர அவர்கள் இந்த புதிய பொறியாளர்கள் படைப் பிரிவின் முதல் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது 2020 ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. மூன்று பிரிகேட் படைப்பிரிவுகளைக் கொண்ட இப் புதிய படைப் பிரிவு நேரடியாக தளபதியின் கீழ் இருக்கும் தலைமை கள பொறியாளர் அலுவலகம் மூலம் இயங்கும்.

தனது உரையின் போது, இராணுவத் தளபதி இந்த படைப் பிரிவின் முக்கியத்துவத்தை விளக்கினார். மேலும் இராணுவத் தளபதி பொறியியலாளர்கள் படையணியின் மகத்தான மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நாட்டிற்கான அந்நிய செலாவணியின் பெரும் தொகையை மிச்சப்படுத்தியுள்ளது என்று கூறினார். "எங்கள் பணம் வெளிநாடுகளில் முடிவடையக்கூடாது, அதற்கு பதிலாக உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய அதி நவீன இயந்திரங்களைப் பெற்று ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் முன்னேறுவோம். உங்கள் கட்டுமான பங்களிப்புகளான பிதுருதாலகால வீதி, புத்தல-கதிர்காம வீதி , நெலுவவில் உள்ள ஜின்கங்க குறுக்கேயுள்ள மர பாலம், போவத்தென்ன அணை, விளையாட்டு மைதானங்கள், அரங்கங்கள், பாடசாலைகள் , சமூக மையங்கள், குளங்கள் போன்றவை அவற்றில் அடங்கும். வீண் விரயம் இல்லாமல் குறைந்தபட்ச செலவு, உயர் தரத்துடன் நீங்கள் செய்துள்ளீர்கள், "என்று அவர் மேலும் கூறினார்.

(அவரது முழு உரையினை கீழே உள்ள வீடியோவில்).

உரையின் முடிவில், படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குனவர்தன அவர்கள் இராணுவத் தளபதிக்கு ஒரு நினைவு பரிசை வழங்கினார். தொடக்க விழாவில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் துமிந்த சிரினாக,மேற்கு பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக்க, கள பொறியியலாளர் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். latest Running | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta