Header

Sri Lanka Army

Defender of the Nation

11th November 2020 09:50:31 Hours

தீகவபிய தூபி புனர் நிர்மான பணிகள் பிரதமரால் அங்குரார்பணம்

அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் மஹாஓய சோபிதா தேரோ அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக நீண்ட காலமாக பாழடைந்த நிலையில் இருந்த பதினாறு வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான புனித ‘தீகவபிய புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளது.

பாதுகாப்பு செயலாளரும் பாரம்பரிய தொல்பொருள் முகாமைத்துவ ஜனாதிபதி செயலணி மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக புத்தசாசன மதங்கள் மற்றும் கலாசார விவகார அமைச்சர் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களால் இன்று (11) மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புனரமைப்பு பணிக்கான மங்கள செங்கலை வைத்து பணியினை ஆரம்பித்து வைத்தார். விழாவின் அடையாளமாக புனிதப் வளாகத்தில் பிரதமர் ராஜபக்ஷ ஒரு நாக (Mesua Ferrea) மரக்கன்றினையும் நட்டினார்.

இந்த பிரம்மாண்டமான பணிக்கான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொல்பொருள் பரிந்துரைகள் தொல்பொருள் துறையின் சிரேஸ்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களால் வழங்கப்படும் மேலும் மனிதவளத்தை முப்படையினர் , சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர்கள் மற்றும் பிற தன்னார்வலர்கள் வழங்குவர்.

அரச நிதிக்கு எந்த செலவும் இன்றி தீகவபிய அறக்கட்டளை நிதியம் அதன் புனரமைப்பிற்கான நிதியை வழங்கும், மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளின் கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் மூலமாக புனரமைப்புத் திட்டத்தை குறுகிய காலத்திற்குள் முழுமையாக முடிப்பதற்கு நிதி திரட்ட எதிர்பார்க்கப்படுகின்றது.

வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர் உள்ளடங்கலாக தலைமை தேரர் மகாஓய சோபிதா தேரோ, மிரிசாவெட்டிய தலைமை தேரர் வணக்கத்திற்கரிய ஈதலவெத்துனுவே ஞானராதன தேரர், கிழக்கு மாகாண ஆளுநர் செல்வி அனுராதா யஹம்பத், வனவிலங்கு வளத்துறை இராஜங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, புத்சாசன மதங்கள் மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, அம்பாறை மாவட்ட செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சித்ரானி குணரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க, கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே, தென்கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த கமகே, பாதுகாப்பு அமைச்சு, புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு , முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உயர் அதிகாரிகள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். best Running shoes brand | Trending