16th November 2020 14:40:58 Hours
யாழ்ப்பண பாதுகாப்பு படை தலைமையகம் நாட்டின் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நாட்டிற்கு ஆசீர்வாதம் ஞாயிற்றுக்கிழமை ( 15) திருவிளக்கு பூஜையினை ஏற்பாடு செய்தது. இது நாட்டின் நான்கு மூலைகளிலும் நடந்த தேசிய விளக்கு பூஜைக்கு இணையாக நடாத்தப்பட்டது.
யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மத நிகழ்வினை வணக்கத்திற்குரிய மகா சங்கத்தின் தேரர்களால் நடாத்தப்பட்டது. இதற்கு இணையாக ஒரே தினத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் நடாத்தப்பட்டது.
யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையக சிரேஸ்ட பதவி நிலை அதிகாரிகள், வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேசத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் மத வழிப்பாட்டில் இணைந்துக்கொண்டனர். வழிப்பாட்டின் போது சிறந்த சமூக இடைவெளி பேணுவதில் கவனம் செலுத்தப்பட்டது. Sport media | Patike