Header

Sri Lanka Army

Defender of the Nation

16th November 2020 15:00:58 Hours

மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி படைப் பிரிவுகளுக்கான விஜயம்

அன்மையில் மத்திய பாதுகாப்பு படை கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரண அவர்கள் நவம்பர் 11-12 ஆம் திகதிகளில் அதன் கட்டளையின் கீழ் உள்ள படைப் பிரிவுகளுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

பல்லேகலயில் உள்ள 11வது படைப் பிரிவு தலைமையகத்திற்கான அவரின் விஜயத்தின் போது, அப் படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாரத சமரகோன் அவர்கள் அவரை பிரதேச தலைமையகத்தின் நுழைவாயிலில் வரவேற்று, பின்னர் அவர்களின் பகுதியில் உள்ள பிரிவின் பங்கு மற்றும் பணிகள் குறித்து விளக்கினார்.

பின்னர், வருகை தந்த பாதுகாப்பு படைத் தளபதி 3 வது இலங்கை சிங்க படையணி , 5வது இலங்கை தேசிய பாதுகாப்பு முகாம் படையணிகளுக்கான தனது விஜயத்தின் பின்னர், லக்சபான மின் நிலைய பிரிவு, கொத்மலை அணைப் பிரிவு, அகுனுவெலிபெலஸ வெடிமருந்து கிடங்கு தளம் மற்றும் பல்லேகலயிலுள்ள இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

11 வது படைப் பிரிவின் படைத் தளபதி , பிரிகேட் படைப்பிரிவு தளபதிகள், அதன் கட்டளையின் கீழ் உள்ள பட்டாலியன்களின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் அவரின் விஜயத்தின் போது போது அவருடன் இணைந்து கொண்டனர். latest Nike release | Nike Releases, Launch Links & Raffles