Header

Sri Lanka Army

Defender of the Nation

10th November 2020 13:05:28 Hours

PCR கட்டணங்களை மீளமைக்குமாறு தனியார் வைத்திசாலைகளை கொவிட் செயலணி கோருகின்றது

ராஜகிரிய கொவிட் -19 பரவலை தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் (NOCPCO) இன்று (6) பிற்பகல் நடைபெற்ற மேலும் ஒரு கலந்துரையாடலில் கொடிய வைரஸ் பரவல் மீண்டும் தலைதூக்கியமை, அதன் தற்போதைய நடத்தை முறைகளின் மதிப்பீடு பி.சி.ஆர் பரிசோதனை நடைமுறைகளின் உத்திகள் மற்றும் அவற்றின் விளைவுகள், பொறுப்பான அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலைகள் இடையிலான ஒத்துழைப்பு, வைத்தியசாலையிலுள்ள புதிய தொற்றாளர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் தன்மை போன்றவற்றவை தொடர்பாக ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலுக்கு கொவிட் செயலணி தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் பொது ஆய்வுக்கூட பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க, நவலோக்க வைத்தியசாலை, ஆசிரி வைத்தியசாலை, லங்கா வைத்தியசாலை, டேர்டன்ஸ் வைத்தியசாலை மற்றும் சில வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பில் முதலில் தனியார் துறை வைத்தியசாலைகளின் (பங்கேற்பாளர்களில்) பி.சி.ஆர் சோதனைகளை தினசரி அடிப்படையில் நடத்துவதற்கும் பி.சி.ஆர் சோதனைகளுக்கான கட்டணங்கள் பற்றியும் தனியார் வைத்தியசாலைகளின் பி.சி.ஆர் திறன், விலைகள் மற்றும் அதன் பரிசோதனை நடைமுறைகளை சீராக்க வேண்டும் என கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் கேட்டுக் கொண்டார். செயலணிக்கு அறிவிக்காது எந்தவொரு வழிகாட்டுதலையும் பெறாது மேற்கொள்ளப்பட்டுள்ளமை விளைவு பாரதுரமானது என குறிப்பிட்டார். இருப்பினும், அனைத்து தனியார் துறை வைத்தியசாலைகளும் முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் ஒருங்கிணைப்பில் கடற்படையின் மேற்பார்வையின் கீழ் கட்டூநாயக்க மற்றும் பியகம ஆடை தொழிற்சாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் அறியப்படக்கூடிய வகையில் மேற்கொள்ளுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கும் பொதுவான கட்டணம் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் உடனடி புதிய கொத்தணிகள் உருவாவதை தடுக்கும் வகையில் அனைத்து தொழிற்சாலைகளிலும் எதிர்காலத்தில் தொழிற்சாலை ஊழியர்களில் குறைந்தப்பட்சம் ஒரு வீதமான ஊழியர்களுக்கு மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. Asics shoes | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov