16th November 2020 15:30:29 Hours
இன்று (18) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 401 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 03 பேர் வெளிநாட்டு கடல் பாதுகாவலர்கள், ஏனைய 398 பேரும் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளவர்களாவர். குறித்த தொற்றாளர்களில் 201 பேர் கொழும்பு மாவட்டம், 82 பேர் கம்பஹா மாவட்டம் மற்றும் 32 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இன்று (18) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,564 பேர் ஆகும். அவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3, 059 பேரும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் 11,505 பேரும் ஆகும். தொற்றாளர்களில் மொத்தம் 8,785 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளில் வெளியேறியுள்ளனர்.
அதன் பிரகாரம் 17 ஆம் திகதி வரையான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,074 ஆகும். அவர்களில் 12,209 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 5,799 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (18) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து 404 பேர் முழுமையாக சுகமடைந்த வெளியேறியுள்ளனர். இதுவரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த எண்ணிக்கை 66 ஆகும். மேலும் இன்று (18) காலை வரையான கடந்த 24 மணி நேரத்திற்குள் கொவிட்-19 தொற்று காரணமாக ஐவர் மரணமாகியுள்ளனர் என பதிவாகியுள்ளது. அவர்கள் கொழும்பு -10, கொழும்பு-02, இரத்மலான, கிருலபன மற்றும் தெமட்டகொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இன்று (18) காலை டோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 01 பயணியும், டுபாயில் இருந்து UL 226 விமானம் ஊடாக 289 பயணிகளும், இந்தியா முப்பாயில் இருந்து UL 1042 விமானம் ஊடாக 07 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை (18) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 33 தனிமைப்படுத்தல் மையங்களில் 3,223 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று நவம்பர் 17 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 8,743 ஆகும். jordan Sneakers | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp