15th November 2020 19:44:53 Hours
இலங்கை பீரங்கி படை படையினரிடையே விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் அம்பு விடும் விளையாட்டு குறித்த அறிமுக செயலமர்வு பனாகொடை புதிய 15 வது ட்ரோன் படையணி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (13) நடாத்தப்பட்டது.
திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய படையணியின் அறிவுறுத்தல்கள் மற்றும் பொறுப்புக்கள் இலங்கை பீரங்கி படைத் தளபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த செயலமர்வினை அம்பு விடும் விளையாட்டு நிபுணரான இலங்கை இராணுவ அம்பு விடும் அணியின் பயிற்சியாளரான கெமுனு ஹேவா படையணியின் கெப்டன் இந்திரநாத் பெரேரா (ஓய்வு) நடாத்தினார். பீரங்கி படையினரால் கிரிக்கெட் மைதானத்தில் விரிவுரை மற்றும் களப் பயிற்சிகளுடன் நடாத்தப்பட்டது.
இலங்கை பீரங்கி படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, நிலையத் தளபதி , பிரதி நிலையத் தளபதி, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை பீரங்கி படை படையினர் பயிலரங்கின் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். jordan Sneakers | Nike Shoes